2004/11/17

மூடநம்பிக்கைகள்

தலைப்பை வைத்து மு.க அவர்களின் மஞ்சள் சால்வை, "அம்மா"வின் நம்பிக்கைகள் என்று எதிர்பார்த்தால் ஏமாறப் போகிறீர்கள். இது உலகின் இரண்டாவது பெரிய குடியரசைப் பற்றியது. இதன் மக்களின் மூட நம்பிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் சினிமாவில் தான் காதலர்கள் துண்டு பீடி, லாலிபாப் குச்சி எல்லாம் பத்து வருடம் சேர்த்து வைப்பார்கள். இங்கே பாதி தின்ற பிரெட் ஒன்றைப் பத்து வருடம் பாதுகாத்திருக்கிறார். கடவுள் மேல் காதலோ ? அதனை வாங்க சிலர் 69000 $ க்கு ஏலம் கேட்டு இருக்கிறார்கள். கடவுளே ! கடவுளே !

1 comment:

Asok said...

Siva,
Link is not working. It is pointing towards httphttp://www.cbc.ca/story/world/national/2004/11/17/grilled-cheese-mary-0471117.html://

You need to remove http from there.

Asok