இந்தியாவில் இந்த வாரம் என்ன காம வாரமா என்ன ? எந்த வலைப்பதிவிற்க்கு போனாலும் ஒரு செய்தி. முதலில் அனுராதா ரமணன், அடுத்தது சொர்ணமால்யா, இரண்டு நாளில் புது டெல்லியில் ஒரு பள்ளிக் கூடத்தில் நடந்த களியாட்டம், அது சரியா தப்பா என்ற அதி முக்கிய ஆராய்ச்சி, எல்லாம் முடிந்தது என்று பார்த்தால் த்ரிஷா ஒரு புயலை கிளப்பினார். இதில் த்ரிஷா பற்றிய செய்தி இந்து பத்திரிக்கையில் தலையங்கமாய் வர இருந்ததாம். இன்னும் சில தெளிந்த மனதுடையோர் அங்கே வேலை செய்வதால் வரவில்லையாம். இணைய வசதி இல்லாத தமிழ்நாடாவது தப்பித்தது. ஆனால் நீண்ட நாள் தப்பிக்க முடியும் என்று தோன்றவில்லை. அடுத்த வாரம் நக்கீரன், ஜு.வி இல்லை குங்குமத்தில் வந்துவிடும். எங்களைப் போன்றோர் இந்தியா திரும்பி வரும் நோக்கம் பயனற்றது, உலகின் இரண்டாம் பெரிய குடியரசைக் காட்டிலும் நாங்கள் இது போன்ற விஷயங்களில் சளைத்தவர்கள் இல்லை பார் என்று சொன்னது போல் இருந்தது. ஆறுதல் அளித்த ஒரே விஷயம் இது தான். ஆச்சரியம் என்னவென்றால் இந்த இந்தியக் குழந்தை இங்கிலந்தில் வளர்ந்தாலும் வெற்றி பெற்ற பின்னர் அது சொன்ன காரணம் தான். இது இங்கு இருக்கும் குழந்தைகள் தெளிவாக இருக்கவும் முடியும் என்பதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு. நம் ஊரில் இருந்தாலும் உருப்படாமல் போக மேலே இருக்கிறது ஒரு எடுத்துக்காட்டு. இந்தியா திரும்பி போவதன் காரணமே போகும் போது இருக்காது போல் இருக்கிறதே.
மேலே உள்ள செய்திகளின் இணைப்பு எதையும் நான் தரப் போவதில்லை. தேவையானால் தேடிப் படியுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்லா எழுதறீங்க சிவா...
தொடர்ந்து எழுதுங்கள்.
இப்போதான் தமிழ்மணத்தில் லிஸ்ட் பன்ணி இருக்கிங்களா..??
நன்றி சுந்தர். வலைப்பதிவில் எழுத தொடங்கியே சில நாட்கள் தான் ஆயிற்று. தமிழ் மணத்தில் இப்போது தான் லிஸ்ட் செய்தேன்.
அவ்வப்போது வந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள். mynose படித்தேன். நன்றாக இருக்கிறது. என் commentsம் எதிர்பாருங்கள்.
Post a Comment