2005/10/13

ரசம், ரசம், ரசம் ...

ரசம் பற்றி கமலாஸ் ஒரு பதிவு எழுதப் போக, ரசப் பைத்தியம் என்று கிட்டத்தட்ட எல்லோராலும் கூப்பிடப்படும் அடியேன் அதை பற்றி எழுதாவிட்டால் எப்படி என்று உள்ளே Alter Ego ஒன்று திட்ட, இதோ நான் சாப்பிட்ட சில நல்ல ரசங்கள் ..

Super Star போல் எப்பொழுதும் நம்பர் 1 : அம்மா ரசம்.
கமல் போல் என்ன கரணம் அடித்தாலும் நம்பர் 2விலேயே (சந்தோஷமாய்) நிற்கும் : மனைவி ரசம்.

இதை தவிர சில ...
பெங்களூரில் : M.G Roadல் Brindavan (அடியேனைக் கண்டவுடன் 2 டம்ளரில் ரசம் வைத்து விடுவார் அங்கே வேலை செய்த நாமம் போட்ட அண்ணாச்சி), Amaravati, Residency road.
மதுரையில் : கணேஷ் மெஸ் ரசத்தை தோற்கடிக்க யாரவது புதிதாய் கடை திறந்தால் தான் உண்டு.
மும்பையில் : Madras canteen, matunga. சுமார் தான் என்றாலும், மும்பைக்கு அவ்வளவு தான் கிடைக்கும்.
Dallasல் : madras pavilion.
Gainesville, Fl : போட்டிக்கு ஆளே இல்லாததால் என் ரசம்.

இதை தவிர சில உவ்வே ரசங்கள் ..
TCE Hostel ரசம்.
சரவண பவன் ரசம். (?)
ரயிலில் வரும் ரசம்.
பெங்களூரில் சாந்தி சாகரில் தரும் ரசம்.

இந்த கடைசி நாலு ரசத்தையும் சாப்பிட்டு விட்டு தெனாலி ராமன் பூனை கணக்கா ரசமே பிடிக்காமல் போன ஜீவன்கள் உள்ளது. அதனால் ஜாக்கிரதை.

2 comments:

யாத்ரீகன் said...

TCE Hostel ரசமா..

தலைவா.. எந்த TCE சொல்றீங்க.. (என்ன பண்ண, முந்தியெல்லாம் TCE-naa மதுரைதான், இப்போ வேற வேற காலேஜ் எல்லாம் TCE-nu vachikinaanga)..

Siva said...

நான் படிச்சப்பவும் ஒரு TCE தாங்க, மதுரையே தான். இப்ப தான் புதுசா நிறைய வந்து இருக்கு. 99 ல நம்ம தொல்லை தாங்க முடியாம டிகிரிய கைல கொடுத்து துறத்தினாங்க :-)