சில நாட்களுக்கு முன்னால் வலைப்பதிவில் எப்படி எழுத வேண்டும் என்று விதிமுறை இயற்றலாம் என்று ஒரு வலைப்பதிவில் படித்தேன். அதுவும் தமிழ்மணத்தினால் திரட்டப்படும் வலைப்பதிவுகளுக்காக என்று படித்ததாய் நினைவு. (எங்கே என்று நினைவு இல்லை). பொதுவாய் இந்த விதிமுறைகள், சட்டங்கள் என்றாலே அரை மைல் தள்ளி நிற்கும் பழக்கம் எனக்கு உண்டு. எதற்காக இவை தேவை ? யார் இவற்றை உருவாக்குவது ? இவை எல்லாம் எனக்கு நானே கேட்டுக் கொள்ளும் கேள்விகள். இதைப் பற்றி யோசிக்க யோசிக்க இவை மேல் எந்த மரியாதையும் வருவதே இல்லை. அது POTA வாக இருக்கட்டும், உலகின் இரண்டாம் பெரிய குடியரசில் திருமணம் பற்றியதாய் இருக்கட்டும், வலைப்பதிவில் எப்படி எழுத வேண்டும் என்பதாக இருக்கட்டும், பெரிய வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை. நல்ல வேளை, தமிழ்மணத்தில் அப்படி எதுவும் செய்யவில்லை.
அப்படி சொன்னவர், இந்த வலைப்பதிவில், எருமை என்று சொன்னதற்க்கு எதிராய் தான், விதிமுறை வேண்டும் என்று சொல்லி இருந்தார். அப்போது நினைவுக்கு வந்தது - சிறு வயதில் என் அப்பா இப்படித் தான் திட்டுவார் ...
"எட்டேகால் லட்சணமே ..
எமன் ஏறும் வாகனமே ..
முட்ட மேற் கூரையில்லா வீடே .."
இப்படியே போகும். யார் எழுதியது தெரியவில்லை. ஆனால் ஆசையாய் சிரித்துக் கொண்டே "இங்கே வா ராசா" சொல்லும் குரலில் சொன்னால், பார்ப்பவர்களுக்கு கொஞ்சுவது போல் இருக்கும் ! நமக்கே திட்டு விழுகிறது என்பது கொஞ்சம் தாமதமாய் தான் புரியும். குட்டிச்சுவரே, என்பதை விட இதை கேட்கலாம் என்று தோன்றும். இனி அப்படித் தான் திட்ட வேண்டும் போல் இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
"எட்டே கால் லட்சணமே" (அப்பிடீன்னா அவலட்சணமே என்று பொருள்)- இது நம்ம ஒளவையார் எழுதினதுங்கோ (திட்டினதுங்கோ).
8 என்பதற்குரிய தமிழ்க் குறியீடு "அ".
கால் (1/4) என்பதற்கு "வ".
go back to pakestan
//அப்படி சொன்னவர், இந்த வலைப்பதிவில், எருமை என்று சொன்னதற்க்கு எதிராய் தான், விதிமுறை வேண்டும் என்று சொல்லி இருந்தார்.//
Yaarua eppo enga sonnanga ellam marandhidumaam..but idhu mattum niyabagam irukkumaam..! Ada pogappaa!! Enakku ennavo neenga ennoda 'best friend'oda friend-aa iruppeengalonnu sandhegam varudhu!!
மாயவரத்தான், உங்க website சுலபமா கண்டுபிடிக்க முடிந்தது, அதைப் போட்டேன். இன்னொருத்தர் பேர் நினைவில் இல்லை, அதனால website கண்டுபிடிக்க முடியலை. அவ்வளவுதான்ங்க.
மத்தபடி, எருமைன்னு சொல்றது உங்க இஷ்டம், (என்னை பாகிஸ்தான் போக சொல்லுவது இன்னொருவர் இஷ்டம் போல்) யாரும் விதிமுறை, சட்டம் எல்லாம் கொண்டு வர கூடாதுன்னு தானே எழுதி இருக்கேன். நான் உங்க side தான்ங்க.
திட்டும் பாட்டும் தான் நினைவில் இருந்தது. ஒளவையார் எழுதியது என்று மறந்துவிட்டது. Thanks Vasanth.
Post a Comment